அடிகாயங்களுடன் ஒருவர் மீட்பு: வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்...

எச்.எம்.எம்.பர்ஸான்-

னநடமாட்டம் இல்லாத பகுதியில் அடிகாயங்களுடன் காணப்பட்ட நபரொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி - குளத்துமடு பகுதியால் ஒருவர் செல்லும் போது சனநடமாட்டம் இல்லாத இடத்தில் நபரொருவர் இரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டுள்ளார்.

காயங்களுடன் கிடந்த நபர் தொடர்பான தகவல்களை அவரது உறவினர்களிடம் தெரியப்படுத்திய பின்னர், உறவினர்கள் விரைந்து செயற்ப்பட்டு 1990 அம்பியூலன்ஸ் சேவை உதவியுடன் காயமடைந்த நபரை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தொழில் காரணமாக வீட்டிலிருந்து சென்ற நாப்பது வயதுடைய நபர் ஒருவரை சனநடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இருவர் வழிமறித்து பொல், தடிகள் மூலம் தாக்குதலை நடத்திவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -