வைத்தியர் நௌசாத்தின் "பூச்செண்டு போல ஒரு மனிதன்" நூல் இன்று வெளியானது.


நூருள் ஹுதா உமர்-
ம்மாந்துறை பிரதேச செயலக கலாச்சார அதிகாரசபை ஏற்பாட்டில் வைத்தியர் எம்.எம்.நௌசாத்தின் "பூச்செண்டு போல ஒரு மனிதன்" நூல் வெளியீட்டு விழா இன்று (28) காலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, உதவி பிரதேச செயலாளர் திரு. ஆஷிக், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆசாத், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ரமீஸ் அபுபக்கர், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டி.எம். ரிம்ஸான் உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை கலாச்சார அதிகார சபை பணிப்பாளர் மாறன் யூ செயின் நூலை வெளியிட்டு வைக்க நூலாசிரியர் வைத்தியர் எம்.எம். நௌசாத்தின் மனைவி முதல் பிரதியை பெற்று கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -