கேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த இரு பிள்ளைகளின் தாய்க்கு பிணை


பாறுக் ஷிஹான்-
கேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த குடும்ப பெண்ணை ரூபா 1 இலட்சம் சரீர பிணையில் செல்லுமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் க.தர்மசீலன் மற்றும் அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் வழிகாட்டலில் கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தலைமையில் சென்ற குழுவினர் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை கல்முனை பிராந்தியத்திற்கு உட்பட்ட கோணாவத்தை-8 அட்டாளைச்சேனை பகுதியில் திடிர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதன் போது குறித்த தேடுதலில் அப்பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான 23 வயதுடைய குடும்ப பெண்ணை 9 சிறு பக்கெட் 5000 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்.

பின்னர் கைதான சந்தேக நபரான குடும்ப பெண்ணை அக்கரைப்பற்று நீதிவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து ரூபா 1 இலட்சம் சரீர பிணையில் செல்லுமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 30 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -