கொரோனா வைரஸ் இனால் முழு நாடும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி ஏனைய நடவடிக்கைகளை சீரமைக்கும் வகையில் தற்போது அனைத்து பணிகளும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்னும் சில தினங்களுக்குள் பாடசாலைகளை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கமைய சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அமைப்பின் தலைமையில் சிரமதான நிகழ்வு இன்று (26) இடம் பெற்றது.
இச் சிரமதான பணிக்கு பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.