வாழ்க்கைக்கு வழிகாட்டிய மயோன் முஸ்தபாவிற்கு நன்றி தெரிவிப்பு!




கலீல் எஸ் முஹம்மத்-
முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் அல்ஹாஜ் மயோன் முஸ்தபா அவர்களின் முயற்சியினால் கல்முனைக்கு, கொண்டு வரப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை காரியாலயத்தில் தனது 42வது வயதில் காரியாலய வேலை உதவியாளராக நியமனம் பெற்றேன். குறுகிய காலத்தில் இலிகிதராக பதவி உயர்வு பெற்றேன். இதனை பெறுவதற்கு உதவிய பெருந்தகை மயோன் முஸ்தபாவிற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு தெரிவிக்கிறார் சாய்ந்தமருது கல்யாண வீதியை சேர்ந்த எம்.ஐ.எம்.ரபீக்

அவர் மேலும் தெரிவிக்கையில்;

எனது கடினமான காலத்தில் தனக்கு அந்த தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவை ஒருபோதும் மறக்க முடியாது.
முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா இந்நகர அபிவிருத்தி அதிகார சபை காரியாலயத்தை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு அதனை கல்முனையில் நிறுவ போதிய இடவசதி இல்லாதிருந்த சூழ்நிலையில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதியில் அமைந்துள்ள சகோதரர் Dr. ஆரிபின் இல்லத்தை வாடகைக்கு எடுத்து திறந்து வைத்தார்.
அன்று புதிதாக திறக்கப்பட்ட காரியாலயத்தில் என்னுடன் யூ.எல்.எம்.ஜாபிர், எம்.ஏ.நொளபர் ஆகியோருக்கும் நியமனம் வழங்கப்பட்டது. இக்காரியாலயத்தின் இணைப்பாளராக எம்.ஐ.எம்.சதாத் நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்தும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதியில் அமைந்துள்ள இக்காரியாலயத்தில் ஒரு வருட காலமாக கடமையாற்றி வந்தேன். அவ்வாறு கடமையாற்றி வந்த எனக்கும் சகோதரர் ஜாபிருக்கும் மட்டக்களப்புக்கு இடமாற்றம் கிடைக்கப் பெற்றது. அந்த நேரம் இந்நகரத்திட்டமிடல் காரியாலயம் சில சதிகாரர்களால் இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் 2005ஆம் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கல்முனை மாநகர சபை மேல்மாடி கட்டிடத்தில் மயோன் மீண்டும் திறந்து வைத்தார். அவ்வேளை மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு இடமாற்றம் பெற்று 2005ஆம் ஆண்டு வருகை தந்தேன்.

தொடர்ந்தும் மயோன் முஸ்தபா அவர்களின் முயற்சியினால் 2006ஆம் ஆண்டு சட்டத்தரணி சம்சுதீன் அவர்களின் இல்லத்திற்கு மாற்றப்பட்டு கிழக்கு மாகாண காரியாலயமாக தரமுயர்த்தப்பட்டது. இதன்போது கே.டி. சந்திரதஸ என்பவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். முழு கல்முனை மாநகருக்குமான அபிவிருத்தி திட்டங்கள் வடிவமைப்பு பெற்றதுடன் சாய்ந்தமருத்துக்கான தனி வீட்டுத் திட்ட அனுமதியின் அனைத்து விடயங்களும் கொழும்பில் இருந்து உயர் அதிகாரிகளை இங்கு வரவழைத்து மயோனின் முழு முயற்சியால் செயல் வடிவம் பெற்றது.
இவ்வாறு இயங்கி வந்த இந்த மாகாண காரியாலயம் சிறிது காலத்தின் பின்னர் அம்பாரையில் மாவட்ட காரியாலயமும் திருகோணமலைக்கு மாகாண காரியாலயமாகவும் இங்கிருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளது.
தற்போது இங்கு எஞ்சியிருப்பது கிளைக் காரியாலயம் மாத்திரமே. மயோனின் அரசியல் வெற்றிடத்தால் அல்லது கல்முனைக்கு தகுதியான தலைமைத்துவம் இல்லாமையால் அதனை தற்போது இழந்துள்ளோம்.
அதனை மீளப் பெற்றுக்கொள்ள தகுதியான தலைமையாக மயோனின் கரங்களை மீண்டும் அவரது புதல்வரூடாக பலப்படுத்த முன்வரவேண்டும்.
2003 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை கடமையாற்றி 18 வருட அரச சேவையில் இருந்து ஓய்வுபெறும் எனக்கு அன்று தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -