இந்தியாவில் இருந்து 58 இந்திய கடற்படை அதிகாரிகளுடன் விசேட விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியாவின் சென்னையில் நகரில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான சேவைக்குச் சொந்தமான எஸ்.ஜி.9667 எனும் சிறப்பு விமானம் நேற்று இரவு 7.12 இற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு நாட்டுக்கு வருகைத்தந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலையின் ஊழியர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்துள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
