32 வருட கால ஆசிரிய சேவையிலிருந்து அப்துல் மஜீத் ஓய்வு.


எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை கல்வி வலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய என்.அப்துல் மஜீத் (ஜுனைதீன்)ஆசிரியர் தனது 32 வருடகால கல்விச்சேவையில் இருந்து கடந்த (15 /6/2020) ஆம் திகதி முதல் ஓய்வு பெற்றுள்ளார்.

கல்முனை அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியினையும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர்கல்வியினையும்
கற்ற இவர், பின்னர் கல்முனை அல் -அஷ்ஹர் வித்தியாலயத்தில் 4 வருடங்களாக தொண்டர் ஆசிரியராக கடமையாற்றிய நிலையில் 1988 இல் இடம்பெற்ற ஆசிரியர் போட்டி பரிட்சையில் சித்தியடைந்த இவர், தனது முதல் நியமனத்தின் மூலம் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் சுமார் இரண்டரை (2 1/2 )வருடங்கள் பணி புரிந்துள்ளார்.

பின்னர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் 2 வருடங்கள் ஆசிரியர் பயிற்சியை முடித்த இவர், பின்னர் கல்முனை அல்-ஸுஹரா வித்தியாலத்திலும்,4 வருடங்களாக ஆசிரியராக கடமை புரிந்த நிலையில் ஆசிரியர் சேவை இடமாற்றத்தின் போது கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் 12 வருடங்கள் ஆசிரியராகவும் , பின்னர் கல்முனை அல் -பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் 10 வருடங்கள் ஆசிரியராகவும் கடமையாற்றிய நிலையில் மீண்டும் கல்முனை அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் 2 வருடங்கள் கடமையாற்றிய நிலையில் தனது 32 வருட கால ஆசிரியர் சேவையிலிருந்து தனது 58 வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.
மேலும் இவர் கிராம மட்டத்தில் பல்வேறு சமய, சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -