நூறு போதை மாத்திரைகளுடன் இருவர் கைது...

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நூறு போதை மாத்திரைகள், ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினரால் நூறு போதை மாத்திரைகள், 1810 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை மற்றும் ஐஸ் போiதைப் பொருட்களை வியாபாரம் செய்வதாக அறிய வந்துள்ளதுடன், இவர்கள் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 18ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை ஃ மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -