முப்பதாயிரம் குடும்பங்களுக்கான வீட்டுத் தோட்ட பயிர் வழங்கல்..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

கே.பி. அறக்கட்டளையின் அனுசரனையுடன் தூயதுளிர் அமைப்பின் ஸ்தாபகர்; சட்டத்தரணி ந.கமலதாசனினால் விவசாயப் பாதுகாப்பு மற்றும் நிலையான உணவு உற்பத்திக் கொள்கைக்கு ஏற்ப இளைஞர்களை ஒன்றினைத்து உருவாக்கப்பட்ட தூயதுளிர் அமைப்புனூடாக தற்போதைய சூழ்நிலையில் வீட்டுத் தோட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முப்பதாயிரம் குடும்பங்களுக்கான ஆரோக்கிய உணவும் அழகிய வாழ்விற்குமான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கிய உணவும் அழகிய வாழ்விற்குமான திட்ட அங்குராப்பண நிகழ்வானது தூயதுளிர் அமைப்பின் ஸ்தாபகர்; சட்டத்தரணி க.கமலதாசனின் இல்லத்தில் தூய துளிர் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் அங்குரார்பணம் செய்யப்பட்டது.

தற்சார்பு பெருளாதார அபிவிருத்திக்கு ஆரம்பப் படியாக உணவு, போசாக்கு, தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவைகள் பேணப்படவும், மனமகிழ்ச்சி பெறவும், உடற்பயிற்சிக்கான சந்தர்ப்பத்தோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் கொரோனா போன்ற பாதிப்பு சூழ்நிலையில் உணவுத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதுடன் நோயத் தொற்றுக்கான சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்ளவும் முடியுமானதாக அமையும் என்ற எண்ணங்களை கருப்பொருளாகக் கொண்டு முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒருவர் என்ற வீதம் முப்பதாயிரம் குடும்பங்களிற்கு வீட்டுத் தோட்ட பொதியினை முற்று முழுவதும் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சித் திட்டமாகும்.

குறித்த பொதியானது கத்தரி (7 கன்றுகள்), மிளகாய் (7 கன்றுகள்), பயிற்றை (10 விதைகள்), வெண்டி (10 விதைகள்) மற்றும் அவரை (10 விதைகள்) என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும் பொதிகள் எதிர்வரும் 11ம் திகதி திங்கட்கிழமை விநியோகிக்கப்பட இருப்பதுடன் பொதிகளைப்பெற விரும்புவோர் கே.பி அறக்கட்டளையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தூயதுளிர் அமைப்பின் ஸ்தாபகர்; சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -