விஷேட அறிவித்தல்.


ற்போதைய ஊரடங்குச் சட்டம் காரணமாக மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு தேவை நிமிர்த்தம் வருகை தந்து தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பிறமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தாம் தற்பொழுது தங்கியிருக்கும் பகுதிக்கான கிராம சேவகர்கள் மூலம் அந்தந்த பிரதேச செயலகத்தில் தம்மை பதிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்டச் செயலாளரினால் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்ற அதே வேளை மன்னார்,முல்லைத்தீவு ஆகிய மாவட்டச் செயலாளர்களுடனும் இது தொடர்பாக கலந்துரையாடப் பட்டுள்ளது.

இது தொடர்பில் மன்னார்,வவுனியா மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருடன் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் கலந்துரையாடி இதற்கான அனுமதியைப் பெற்றதற்கு அமைய

மேற்படி மாவட்டங்களிலிருந்து
தமது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பவர்கள் தமது பதிவுகளை கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்தில் பதிவு செய்த பின்னர் தமது.

1.பெயர்:-
2.அடையாள அட்டை இலக்கம்:-
3.தொலைபேசி இலக்கம்:-
4.தற்பொழுது இருக்குமிடம் செல்ல வேண்டிய இடம்:-

ஆகியவற்றை 077 35 43 567
எனும் இலக்கத்திற்கு SMS ஊடாகவோ அல்லது வட்ஸ்சப் மூலம் அனுப்பி வைக்குமாறு வேண்டுவதுடன்.

அவ்வாறே புத்தளத்திலிருந்து மன்னார் வவுனியா முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் கீழ் வரும் இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -