உணவு நன்கொடைக்கான செய்தி


ஏ.எஸ்.எம்.ஜாவித் -

கொரோனா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர் ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக வீடுகளில் முடங்கியிருக்கும் பெருமளவான மக்கள் அத்தியாவசிய உணவின்றி தவிக்கும் இந்நேரத்தில் மட்டக்குளி, முகத்துவாரம் மற்றும் கொட்டாஞ்சேனையில் வாழும் வறிய குடும்பங்களுக்கு கணடாவில் வசிக்கும் பஸ்லி தௌபீக் மற்றும் இலங்கையில் இருக்கும் அவரது சகோதரர் அஸ்லம் தௌபீக் ஆகியோர் ஒன்றினைந்து 5வது தடவையாகவும் இம்மக்களுக்கு உலர் உணவு வகைகளையும், சிறுவர்களுக்கு பால்மா வகைகளையும் வழங்கி வருகின்றனர்.

இன்று சகல சமுக மக்களுக்குமாக சுமார் 3500 பேருக்கு 5வது தடவையாக இந்த உலர் உணவு வகைகளை வழங்கி வைத்துள்ளனர். இவர்களின் இந்த சேவைக்கு முகத்துவார பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜானக குமாரவும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -