அனுஷா சந்திரசேகரனின் இரங்கல்


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ரசியல் களத்தில் எதிர் எதிர் அணியில் இருந்தாலும் மக்கள் நலனில் என் தந்தையுடன் இணைந்து செயற்பட்ட வகையில் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு பேரதிர்ச்சியளிக்கிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற் மாபெரும் ஸ்தாபனத்தை வழிநடத்தும் வல்லமை, தனி நபர் ஆளுமை கொண்ட இவரது மறைவு நிச்சயமாக நிரப்பப்பட முடியாத வெற்றிடமாகவே அமையும்.
எனது தந்தையின் எதிர்பாராத மறைவின்போது எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து ஆறுதல்கூறி என் தந்தையின் இறுதிசடங்கை முன் நின்று நடத்தியமை என் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
நாட்டின் தற்போதைய நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் மனக்குமுறல்களுக்கு எப்படி வடிகால் கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை.

பிரிவால் அதிர்ந்திருக்கும் அனைவருடனும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.-அனுஷா சந்திரசேகரன்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -