கொழும்பு கம்பஹாவில் சட்ட நியதிகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும் அறிவுரை பகரும் பைஸர் முஸ்தபா


கொழும்பு கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில், சட்ட நியதிகளை மதித்து பொதுமக்கள் தொடர்ந்தும் நடந்துகொள்ள வேண்டும் அறிவுரை பகரும் பைஸர் முஸ்தபா 


ஐ. ஏ. காதிர் கான்-
னிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் (26) செவ்வாய்க்கிழமை முதல் சில நிபந்தனைகளுடன் தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றபோதும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துதல் தொடர்பிலான அரச, சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் சட்ட நியதிகளை மதித்து தொடர்ந்தும் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, இலங்கை வாழ் அனைத்து சமூகங்களிடமும் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பிலான எத்தகைய அச்சுறுத்தல்களையும், முறையாகவும் வெற்றிகரமாகவும் எதிர்கொள்ளும் வகையில் மக்கள் இத்தருணத்தில் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அனைவரிடமும் கேட்டுள்ளார்.
கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பிலான நாட்டின் தற்போதைய நிலை குறித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இதுவரை மரண வீதம் 9.5 விடக் குறைவாகவே உள்ளதைக் காண்கின்றோம். அந்த வகையில், வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாடுகளில், "குறைந்த மரணம், வெற்றிகரமான வைரஸ் ஒழிப்பு" என்ற ரீதியில் இலங்கை முன்னணியில் திகழ்வது மகிழ்ச்சிக்குரியது.
இலங்கையைப் பொறுத்தவரை ஏனைய நாடுகளைப் போலன்றி, நாட்டில் முதலாவது வைரஸ் தொற்று நோயாளி இனங்காணப்பட்ட உடனேயே, இந்த வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரச, சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் ஆரம்பித்து விட்டனர் என்பதே உண்மை. உண்மையில், இவ்வாறானவர்கள் பாராட்டப்பட வேண்டும்.
இதேவேளை, கொரரோனா தொற்று கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகளை உருவாக்கும் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. "இலங்கையில் கொரோனா தொற்று, இன்னமும் சமூகத்திற்குள் பரவவில்லை" என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில்,
சுகாதார அமைச்சு ஆரம்பம் முதல் எடுத்து வரும் நடவடிக்கைகளே இந்த வெற்றிக்குக் காரணம் என்பதையும் அறிந்து பெருமிதம் அடைகின்றேன்.
அத்துடன், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட விதிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் பொதுமக்களில் பெரும்பாலானோர் உரிய முறையில் பின்பற்றியிருக்கின்றார்கள் என்பதையும் அறிந்து சந்தோஷமடைகின்றேன்.
இது தவிர, சில தனி நபர்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளைப் புறக்கணித்து வருகின்றமை, இன்றைய சூழலில் கவலைக்குரியது.
இவர்களும் பெரும்பாலான மக்களின் நடைமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதும் எனது வேண்டுகோளாகும்.
அத்துடன், இவர்கள் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார ஆலோசனைகளையும் எதிர்காலத்தில் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.
ஆகவே, கொரோனா தொற்று பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்கு, பொதுமக்கள் தமது ஒத்துழைப்புக்களை மேலும் அதிகமாக வழங்க வேண்டும் என்பதுடன்,
கொரோனா தொற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பின் விளைவுகளையும் மக்கள் தீவிரமாகக் கருதிச் செயற்பட வேண்டும் என்றும் அன்பொழுகக் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -