பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் அளவில்லா மகிழ்ச்சியடைகின்றது - கல்குடா ஜூம்ஆ பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு.


ஆத் அப்துல்லாஹ்-
ரு மாத காலம் புனித நோன்பினை நோற்று, நல்லமல்கள் செய்து அல்லாஹ்வின் திருப்தியினை எதிர்பார்த்த நிலையில் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற சகல முஸ்லிம்களுக்கும் குறிப்பாக கல்குடா பிரதேச மக்களுக்கும் கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் அளவிலா மகிழ்ச்சியடைகின்றது.

இவ் வருட புனித ரமழான் நோன்பானது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சோதனை மிகுந்ததொரு கால கட்டத்தில் வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே புனித நோன்புப் பெருநாளையும் நாம் கொண்டாட வேண்டியதொரு நிலை ஏற்பட்டுள்ளது.
பல சிரமங்களுக்கு மத்தியில் பொறுமையுடன் புனித ரமழான் நோன்பினை நோற்று, பள்ளிவாயல்கள் பூட்டப்பட்ட நிலையிலும் தங்கள் வீடுகளில் குடும்ப சகிதம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நோன்புப் பெருநாள் தொழுகையினையும் தங்கள் வீடுகளில் நிறைவேற்றிய நிலையில் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நாம் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.

நோன்பானது ஏழைகளின் பசியினை அறிந்து அவர்களுக்கு உதவி செய்வதற்கான மனப்பாங்கினை ஏற்படுத்துவதுடன் பொறுமை,. சகிப்புத் தன்மை, தலைமைத்துவக் கட்டுப்பாடு, ஒற்றுமை, சகோதரத்துவம் போன்ற இன்னோரன்ன மனித வாழ்விற்கான மனித விழுமியங்களையும் கற்றுத் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் காலப்பகுதியில் கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல் கூட்டமைப்பு மற்றும் ஏனைய நிறுவனங்கள் என்பன இப் பிரதேச மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் வழங்கிய அறிவுறுத்தல்களையும், சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடித்து கட்டுப்பாட்டுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொண்டமைக்காக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -