அக்கரபத்த்னை அயோனா தோட்டத்தில் சிறுத்தை குட்டியொன்று உயிருடன் மீட்பு.



ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

க்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை அயோனா தோட்டத்தில் முதலாம் இலக்க தேயிலை மலையில் சிறுத்தை இனத்தை சேர்ந்த குட்டியொன்று நேற்று (23) மாலை 5.30 மணி மீட்கப்பட்டது.

குறித்த தேயிலை மலையில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டு இருக்கும்  போது சிறுத்தை இனத்தைச் சேர்ந்த மூன்று கூட்டிகளை நாய்கள் துரத்திகொண்டு வந்துள்ளன.

இதனை கண்ட தொழிலாளர்கள் கூச்சலிட அதில் ஒரு குட்டி பயந்து அந்த தேயிலை மலையில் சவுக்கு மரத்தில் ஏறியுள்ளது.

அதனை தொடர்ந்து தோட்ட நிர்வாகம் அக்கரபத்தனை பொலிஸாருக்கு அறிவித்ததைதொடர்ந்து பொலிஸார் வன இலாக்கா அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த சிறுத்த குட்டு சுமார் 40 உயரத்தில் நாலரை மணித்தியாலங்கள் வரை இருந்துள்ளன.

அதனை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு வருகை தந்த வனஜீவிகள் அதிகாரிகள் சிறுத்தை குட்டியினை மீட்பதற்காக அங்கிருந்த இளைஞர் ஒருவரை மரத்தில் ஏற்றினர.; அப்போது குறித்த சிறுத்தை குட்டி மரத்தில் குறிப்பிட்ட தூரம் இறங்கி தேயிலையில் பாய்ந்து ஓடிச்சென்றது.

இது குறித்து தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் அண்மைக்காலமாக ஆறுக்கும் மேற்பட்ட சிறுத்தை இனத்தை சேர்ந்த குட்டிகள் இறந்துள்ளன.
அதிகமாக தேயிலை மலைகள் காடுகளாக மாறியுள்ளமையினால் இன்று சிறுத்தைகள் அப்பிரதேசங்களை தங்கள் வாழ்விடங்களாக மாற்றிக்கொண்டுள்ளன.

இதனால் சிறுத்தையினங்களும் பொது மக்களும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இன்று கூட சிறுத்தையினை மீட்க வந்த வனஇலாக்கா அதிகாரிகள் எவ்வித ஆயத்தமின்றி வந்ததாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றன.

எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -