தொழிலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும்


பாறுக் ஷிஹான்-
சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் ஏனைய தொழிலாளர்களுக்கு வேதங்கள் சரியாக வழங்கப்பட வேண்டும்.எமது நாட்டைப் பொறுத்தளவில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும். வைரஸ் பரவாமல் சுகாதாரத் துறையினரும் ஏனைய துறையினரும் அயராது பாடுபட்டு வருகின்றனர் இதற்கு மக்கள் ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் தொழிலாளர் தினம் தொடர்பாக வெள்ளிக்கிழமை(1) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு கூறினார்.


தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்

இன்று எம்மை ஆட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காலத்தில் உங்களுக்காய் பாடுபடுகின்ற தொழிலாளர்களது நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் குறிப்பாக சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் ஏனைய தொழிலாளர்களுக்கு வேதங்கள் சரியாக வழங்கப்பட வேண்டும்
எமது நாட்டைப் பொறுத்தளவில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும் வைரஸ் பரவாமல் சுகாதாரத் துறை யினரும் ஏனைய துறையினரும் அயராது பாடுபட்டு வருகின்றனர் இதற்கு மக்கள் ஒத்துழைப்பு செய்ய வேண்டும் .

இதனை அரசியல் லாபத்திற்காக சுயலாபத்திற்காக திசை திருப்ப முயற்சிப்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர் அரசாங்கத்திடம் நான் வைக்கும் மிகப் பிரதான கோரிக்கை என்னவென்றால் குழப்பவாதிகள் இடமிருந்து முதல் நாட்டை பாதுகாக்க வேண்டும் அரசாங்கத்துக்கு வழங்கும் நிவாரணங்கள் மக்களிடையே சென்று அடையாமல் இருப்பதற்கு இந்த குழப்பவாதிகள் காரணம்.ஜனாதிபதி தற்போது எடுத்திருக்கும் தீர்மானத்தை குறைப்பதற்காக சில விஷமிகள் திட்டமிட்டு செயற்படுகின்றனர் ஜனாதிபதியின் தீர்க்கமான செயற்பாடுகளுக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் சில அரசியல் லாபத்திற்காக ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளில் சிலர் இருக்கின்றனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -