பிரேமதாஸவின் 27வது நினைவு தினம் இன்று


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
றைந்த முன்னால் ஜனாதிபதி ஆர் பிரேமதாஸவின் 27வது சிரார்த்த தினம் இன்றாகும்;;. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக வழமைக்கு மாற்றமாக அவரின் நினைவு தினம் மிக எளிமையாக இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
கொழும்பு-12 நீதி மன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று காலை 10.00 மணியளவில் வருகை தந்த அவரது புதல்வர் முன்னால் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் அவரது துணைவியாரும் மிக எளிமையான முறையில் சிலைக்கு மலர் அஞ்சலி செலித்திவிட்டுச் சென்றனர்.
கடந்த 27 வருடத்திற்க முன்னர் மே தினத்தன்று படுகொலை செய்யப்பட்ட முன்னால் ஜனாதிபதியின் நினைவு தினம் அவரது குடும்ப உறுப்பினர்களால் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருவது வழக்கம் குறிப்பாக நீதி மன்ற வளாகம் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமிக் காணப்படும் இடம் இன்று வெறிச்சோடிக்கிடந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அபிவிருத்தியின் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற தூர நோக்கம் கொண்ட ஒரு தலைவராக விளங்கியவர் மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவாகும். பல ஆயிரக்கணக்கான வறிய மக்களுக்கு இலவச வீடமைப்புத் திட்டங்கள், சுய தொழில் வசதிகள் உள்ளிட்ட பல அபிவிருத்திகளை துணிச்சலுடன் மேற் கொண்ட ஒரு தலைவர் என அவர் வரலாற்றில் தடம் பதித்துள்ளார் என்பதற்கு அவர் நாடு பூராகவும் மக்களுக்காக மேற்கொண்டிருந்த அபிவிருத்திகள் பல இன்றும் சான்று பகருகின்றன எனலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -