அததெரண ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று அட்டுளுகமை பிரதேசத்தில் பள்ளிவாசல்களை புகைப்படம் எடுக்கச் சென்ற போது அங்கிருந்த இளைஞர்கள் ஊடகவியலாளரைத் தாக்கி அவருடைய மோட்டார் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
அவ்விடத்திற்கு வந்த பள்ளிச் சங்கத் தலைவர் நஜீத் ஹாஜியார் அவர்கள் ஊடகவியலாளரை அனுப்பி வைத்ததோடு ஊடகவியலாளர் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததால் அட்டுளுகமை பிரதேசத்தில் இவ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
