இலங்கையில் கோரோனா வைரஸினால் மாதக் கணக்கில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இவ்வகையான திடிர் அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கே அன்று மறைந்த ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவின் சிந்தனைகள் இன்று; அமுல்படுத்துவதற்கு சாலச் சிறந்தாகும்.
அவர் நகரத்தில் இருந்து கிராம மட்டங்களுக்கு கிராமிய பொருளாதாரத்தினைக் கொண்டு சென்றார். ஒவ்வொரு வருடமும் தத்தமது வீடுகளில் உள்ள காணிகளில் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்த்தினை அமுல்படுத்தார்;, 10 இலட்சம் 1.5 இலட்சம் வீடுகளை நாடு பூராவும் நிர்மாணி;க்கும்போது அக் காணியில் மேலதிகமாக ஒரு காணித்துண்டொன்றை வழங்கி அதில் வீட்டுத் தோட்டங்கைளயும் மரக்கறி வகைகளை பயிர் செய்வதற்கும் ஆலோசனை வழங்கி அதனை ; அன்று ஆரம்பித்து வைத்தார்.. வீடுகளில் முடங்கிக் கிடக்கும் இளைஞர் யுவதிகள் தாம் வாழும் பிரதேசத்தில் இருந்துகொண்டே வெளிநாட்டு உள்நாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு 200 ஆடை தொழிற்சாலைகளை கிராமங்களில் ; ஆரம்பித்து வைத்தார். தமது உற்பத்திப் பொருட்களை கிராமங்களில் இருந்தே விற்பனை செய்வதற்காகவே கம்உதாவ திட்டத்தின் கீழ் பொருளாதார விற்பனை நிலையங்களையும் ஆரம்பித்து வைத்தார்..
இலங்கையில் 3வது ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாச 1923 ஜூன் மாதம் 23ஆம் திகதி பிறந்தார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரேமதாச பிரதமராகவும் பதவி வகித்தார்.
1990-1989 காலப்பகுதிகளில் 39 வருடங்கள் தமது அரசியல் வாழ்க்கையில் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தன்னையே அர்ப்பணித்தொரு அரசியல் தலைவர். ஆர் பிரேமதாசா. அவர் அதன் பின்னர் 4 வருடங்களும் 4 மாதங்களும் இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாகவும் அவர் பதவி வகித்தார். இவர் தமது 69வது வயதில் 1993ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி கொழும்பு ஆமர் வீதியில் வைத்து மே தின ஊர்வலத்தின்போது புலிகலின் தற்கொலைக் குண்டுதாரியினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்; அவர் மரணமடைடந்து இவ்வருடத்துடன் மே 1ஆம் திகதியுடன் 27 வருடங்களாகின்றன.
கொழும்பு புனித ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். முன்னாள் தொழிற்சங்கவாதியான காலம் சென்ற ஏ.ஈ.குணசிங்கவின் ஊடகவே தமது அரசியல் வாழ்வை ஆரம்பித்தார். அதன் பின்னர் 1960ஆம் ஆண்டு ஜ.தே.கட்சியல் இணைந்தார். கொழும்பு மாநகர சபை உறுப்பிராகவும் பிரதி மேயராகவும், மேயரகாவும் பதவி வகித்தார். கொழும்பு மத்தியதொகுதியில் இருந்து தனது அரசியலில் பிரவேசித்தார்.
டட்லி சேனாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் 1967இல் இலங்கை ஒலிபரப்பு சம்பந்தமான அமைச்சராக பதவி வகித்து இ.ஒ.கூட்டுத்தாபணத்தினை அமைத்தார். இவர் பிரதமராகவும் வீடமைப்பு உள்ளுராட்சி நகர அபிவிருத்தி நீர் ;விநியோக வடிகாலமைப்பு பொறுப்பின் அமைச்சாகவும் பதவி வகித்தார். இக் காலகட்டத்தில் நாடு முழுவதிலும் 10 இலட்சம் வீடமைப்புத் திட்டம், கம்உதாவ கிராம எழுச்சித்திட்டம், டவர் கோல் திட்டம், கெத்தராம , சுகதாச மைதானங்கள் நாடு முழுவதிலும் உள்நாட்டு நிர்வாகங்களை பிரதேச செயலாளர் பிரிவினை ஆரம்பித்து கிராமங்களுக்கும் நிர்வாகத்தினை விஸ்தரித்தார். நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் மணிக்கூட்டுக் கோபுரங்களையும் நிறுவினார். மகாவலி, அபிவிருத்தித் திட்டங்கள், கிராமோதயம், சுவர்ணபூமி, சுதந்திர வர்தத்க வலயங்கள் போன்ற திட்டங்களையும் அமைத்தார். பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தினையும் ஏற்படுத்தினார். நாடு முழுவதிலும் சகல அமைச்சுக்களையும் திணைக்களத்தினையும் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதி நடமாடும் சேவையினை ஏற்படுத்தி மக்களது பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தார். கல்விக் கல்லூரிகள் நிறுவும் திட்டம் இவரது காலத்திலேயே ஆரம்பமானது. அத்துடன் நாடுமுழுவதிலும் ஒரே நாளில் 25ஆயிரம் ஜனசவிய ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கி வைத்தார்.
கொழும்பு வாழைத்தோட்டத்தில் உள்ள சுச்சரித்த என்ற அவரது வீட்டில் அதிகாலை 4 மணிக்கே பொதுமக்கள் சந்திப்பினை ஏற்படுத்தி மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்து உடன் நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் வீடடற்ற மக்களுக்காக தொடர்மாடி வீடமைப்புத்திட்டங்கள் 225க்கும் மேற்பட்ட வீட்டுத் திட்டங்களை நிர்மாணித்து நடுத்தர மக்களது வீடில்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். அவ் வீடுகளில் வாழும் மகக்ள் இன்றும் தமது வீடுகளில் உள்ள முன் வாசலில் அவரது உருவப்படம் தொங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன் ஜ.நா அமையத்தில் சர்வதேச குடியிருப்பு (ஹெபிடாட்) அமையத்தினை முன் மொழிந்து 2000ஆண்டில் யாவருக்கும் வீடுஷ என உறுதி கூறினார். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் திங்கட் கிழமையில் உலக குடியிருப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆர்.பிரேமதாச நாடு பூராவும் கிராம எழுச்சித் திட்டத்தினால் 4000க்கும் மேற்பட்ட வீடமைப்புக் கிராமங்ககளை உருவாக்கினார். இதன் மூலம் அப்பிரதேசத்தில் மின்சாரம் ,நீர், பாதை, பாடசாலை , சனசமுக நிலையம், விளையாட்டு மைதானம், மத வழிவாடு நிலையங்கள் அமைப்பதற்கு இத் திட்டத்தினை பயன்படுத்தினார்.
இந் நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக ஜனசவிய எனும் உதவித் திட்டத்தினையும் உருவாக்கினார்.
ஏழை மக்களது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்கும் பாடுபட்டார். நாடுகளில் பல இடங்களிலும் கட்டுநாய்க்க மற்றும் தென்பகுதிகளிலும் தொழல்பேட்டைகளையும் ஆரம்பித்து வெளிநாட்டு உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்போடு கிராமத்து இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பைபபறுவதற்கும் காரண கர்த்தாக இருந்தார். அத்துடன் தாபரிப்பு பெற்றொர் மற்றும் கல்வி மேம்பாட்க்கும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுததத ஒரு தலைவர் ஆர்.பிரேமதாசா அவர் மறைந்து இன்றுடன் 27 வருடங்களானபோதும் அவரது சேவையின் ;நன்மையடைந்த மக்கள் இன்றும் அவரை நினைவில் கொண்டுள்ளனர்.
இவர் இந் நாட்டை ஜனாதிபதியாக பாரமெடுத்த்போது நாட்டில் பாரிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக் காலத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிகாரம் நாட்டில் இந்தியப் படையினர் இலங்கை நிலை கொண்டிருந்தனர். உடன் செயற்பட்டு இந்தியப் படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார். ரணசிங்க பிரேமதாச தமது தலைமைப் பதவியில் சகல தே தொகுதிகளிலும் தேர்தலில் வெற்றி கொண்டார். கிராமத்தில் ஏழையாக பிறந்து அவர் மக்களோடு மக்களாக வாழ்ந்தார். இவருக்கு பின்னால் பாரிய மக்கள் சக்தி திரண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
