ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கமலை காட்டுப்பகுதிக்கு அண்மித்த பகுதியான கொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் இன்று (03) திகதி மாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
மத்திய மாகாணத்தில் தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலையினையடுத்து இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதனாலும் கடும் காற்று நிலவி வருவதனாலும் தீ மிக வேகமாக பரிவியுள்ளது.
இதனால் இந்த காட்டுப்பகுதியில் உள்ள பெறுமதிமிக்க மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீரூற்றுக்கள்,அறியவகை தாவரங்கள்,மருந்து மூலிகைகள்,எமது நாட்:டுக்கே உரித்தான தாவரங்கள் உட்பட உயிரினங்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
ஊடரங்கு சட்டம் நிலவி வரும் காலப்பகுதியில் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இதனால் எதிர்க்காலத்தில் பாரியளவில் குடிநீர் தட்டுப்பாட்டினை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
காடுகளுக்கு இனந்தெரியாத விசமிகளே தீ வைக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.