நாட்டில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் தமது குடும்ப வருமானத்தை இழந்து மிகவும் கஸ்டமான நிலையில் வாழும் இறக்காமம் , வரிபத்தான்சேனை பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு முன்னாள்.அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த திங்கட் கிழமை ( 20 ) வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்றது
.முன்னாள்.அமைச்சர்மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்..றிஸ்கான் முகம்மட் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஜனனம் அமைப்பின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான வி.ஜனகன் , மெஜஸ்ரிக் சிற்றி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எம். கிறிஸ் , வரிப்பத்தான்சேனை யங் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவர்.முகம்மட் சனுஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களுக்கும் எதிர்வரும் நாட்களில் உலர் உணவு பொதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக முன்னாள் அமைச்சரின் இணைப்பாளர்.றிஸ்கான் முகம்மட் தெரிவித்தார்