இலங்கையில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கவீனர்களாகவும் ஆக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்று செவ்வாய்க்கிழமை (21.04.2020) ஓராண்டு நிறைவு நிகழ்வு நாடாலாவிய ரீதியில் வக்பு சபையின் தீர்மாணத்திற்கு அமைய முஸ்லீம் கலாச்சாரார திணைக்களத்தினால் நாடாலாவிய ரீதியில் பள்ளிவாயல்களில் விஷேட துஆ பிராத்தனை இடம் பெற்றது.
இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல்களிலும் விஷேட துஆ பிராத்தனை இடம் பெற்றது.
இதன் போது வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி அல் ஹாபிஸ் ஏ.எல். முஸம்மில் நாத்தியதுடன் ஒட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் துஆ பிராத்தனையை மௌலவி ஏ.எல்.எம். முஸ்தபாவும் நடாத்தி வைத்தனர்.