ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் காசல்ரீ பிரதான வீதியில் காசல்ரீ ராணுவ சோதனைச் சாவடியில் வைத்து சட்டவிரோத முறை சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை கொண்டுசென்ற இருவர் இன்று 21 ம் திகதி காலை 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
காசல்ரீ மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு காசல்ரீ தோட்டப் பகுதி கொண்டு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இவர்கள்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சோதனை சாவடியில் கடமையில் இருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் அந்த வீதியில் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றினை சோதனையிட்ட போது அதில் 11 முழு மதுபான போத்தல்கள் 25 சிறிய மதுபான போத்தல்களும் இருந்துள்ளன. அதனை தொடர்ந்து அதனைக் கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மதுபான போத்தல்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் மதுபான போத்தல்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திறக்கப்பட்ட மதுபானசாலைகள் இன்று(21) திகதி மூடு மூடுமாறு அரசாங்கம் அறிவித்ததனை தொடர்ந்து தோட்டங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இந்த மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணையை தொடர்ந்து சந்தேகநபர்கள் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.