சதோச நிறுவனத்தின் ஆவணங்கள் பலவற்றை மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் கைக்கு கிடைகக் செய்தமை, மின் பிறப்பாக்கிகளை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் 7 ஆயிரத்து 340 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்தான விசாரணைகளுக்காக ரிஷாட் பதியுதீன் அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபணத்துக்குள் அத்துமீறியமை மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்த விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடிக்கு முற்பகல் 10 மணிக்கு ஆஜராகுமாறு சி.ஐ.டி. மேர்வின் சில்வாவுக்கு இந்த அறிவித்தலை அனுப்பியுள்ளது.
