மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட லக்கம் தனியார் தோட்த்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் நிர்கத்திக்குள்ளாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த லயன் குடியிருப்பில் திடீரென ஒரு குடியிருப்பிலிருந்து 04/03 மாலை தீ பரவியுள்ளது
உடனடியாக விரைந்து செயற்ட்ட அயலவர்கள் ஏனைய குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் கட்டுபடுத்தியுள்ளனர்
எனினும் குறித்தி வீட்டிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் பெருமதியான வீட்டு உபகரணங்கள் நாசமாகியுள்ளது
பாதிக்கப்பட்ட குடும்பத்தை உறவினர்களின் வீட்டில் தற்காளிகமாக தங்கவைத்துள்ளனர்
மஸ்கெலியா பிரதேசசபை அனர்த்த முகாமைத்துவ குழு பார்வையிட்டதுடன் அவர்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை சபை நிதியில் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தீ விபத்து தொடர்பில் விசாரணை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்


