இன்று சம்மாந்துறை பிரதேசசபையின் புதிய உதவித்தவிசாளர் தெரிவு!


காரைதீவு நிருபர் சகா-
ம்மாந்துறை பிரதேசசபையியின் புதிய உப தவிசாளர் தெரிவு இன்று(5) வியாழக்கிழமை சபையின் விசேடஅமர்வில் இடம்பெறவிருக்கிறது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் எ.எம்.எம்.நௌசாட் முன்னிலையில் சபா மண்டபத்தில் இந்த தெரிவு இன்று இடம்பெவிருக்கிறது.

ஏற்கனவே உப தவிசாளராககவிருந்த ஜலங்காசுதந்திரக்கட்சியைச் சேர்ந்த என்.ஜெயச்சந்திரன் இப் பதவியிலிருந்து விலகிய காரணத்தினால் இவ்வெற்றிடம் ஏற்பட்டது. திரு.ஜெயச்ந்திரன் தனதுஇருவருட காலம் நிறைவடைந்த அன்றே கனவான்அரசியலுக்கு முன்னுதாரணமாக தனது பதவியைஇராஜினாமாச்செய்து தவிசாளருக்கு கடிதம் வழங்கியிருந்தார்.

ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் தலைமைப் பீடம் இருவருடத்திற்கு ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவ் ஒப்பந்தத்திற்கு அமைய இன்று ஒருவர் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்.
உப தவிசாளராககவிருந்த என்.ஜெயச்சந்திரன் தனது இராஜினாமாக் கடிதத்தில் இப்பதவியை ஸ்ரீல.சு.கட்சி பிரதேசசபை உறுப்பினர் எ.எச்.சி.மொகமட்டிற்கு வழங்குமாறு கேட்டிருந்தார். பெரும்பாலும்சபையில்இன்று அவர் தெரிவு செய்யப்படலாமெனத் தெரியவருகிறது.
இருந்த போதிலும் ஜனநாயக முறையில் இப்பதவிக்கு எந்த உறுப்பினரையும் சுட்டி பிரேரித்து ஆமோதிக்கலாம். ஆனால் சபையில்உறுப்பினர்களே அத்தெரிவை மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளுராட்சிசசட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இன்றுதான் உபதவிசாளர்யார் என்பது தெரியவரும் எனலாம்.
சம்மாந்துறைபிரசேசபை ஸ்ரீலசு.கட்சியும் அ.இ.ம.காங்கிரசும் இணைந்து ஆட்சியைஅமைத்தமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -