கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் நடத்தபட்டு வரும் தமிழ் மொழி பட்டயக் கற்கை நெறி பட்டமளிப்பு விழாவும் "வாண்மொழி" நூல் வெளியீடும்
கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் நடத்தபட்டு வரும் தமிழ் மொழி பட்டயக் கற்கை நெறி பட்டமளிப்பு விழாவும் "வாண்மொழி" நூல் வெளியிடும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பேராசிரியர் மா. கருணாநிதியிடமிருந்து பெற்றுக் கொள்வதனையும் அருகில் நூலாசிரியர், ராஜரட்ணம் ருக்சானும் காணப்படுகின்றார். இந் நிகழ்வின்போது கலை இலக்கியத்துறையில் அறை நூற்றாண்டுகாலமாக இயங்கிய சிரேஸ்ட எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு "தமிழ் நிதி" விருது வழங்கி கௌரவிக்கப்படுவதையும் தமிழ்மொழி பட்டங்கள் பெற்ற பட்டதாரிகள் சான்றிதழ்களை பெற்றுக் கொளவதனையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
