வியாபாரிகள் தற்காலிகமாக தம்புள்ளை செல்ல அனுமதி மறுப்பு


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்ளும் வியாபாரிகள் தற்காலிகமாக தம்புள்ளை பகுதிக்கு மரக்கறி கொள்வனவு செய்வதை நிறுத்துமாறு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் அரசாங்கத்தினால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பிற மாவட்டங்களுக்கான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் தம்புள்ளை பகுதிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மரக்கறி கொள்வனவு செய்வதற்கு செல்லும் வியாபாரிகளை தற்காலிகமாக செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலைமைகள் சீராக வந்ததும் மரக்கறி வியாபாரிகள் தங்களது மரக்கறி கொள்வனவு செய்வதற்கு செல்ல முடியும் என்றும், இதற்கு வியாபாரிகள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -