அடுத்த 10 நாட்களில் 1 லட்சம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும்- அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனா வைரஸால் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வென்டிலேட்டர்கள் அவசியமாக தேவைப்படுகிறது. ஆனால் பல நாடுகளில் வென்டிலேட்டர் கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் வைத்தியர்களுக்கு ஏற்படுகிறது. தற்போதைய நிலைமையில் இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதனால் பல்லாயிரக்கானோர் உயிர்கள் அங்கு உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.

எனவே அந்த நாடுகளில் வென்டிலேட்டர் கருவிகளின் தேவை மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்த நாடுகள் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் தேவை மற்றும் மற்ற நாடுகளுக்கும் உதவும் வகையிலும் நிறைய வென்டிலேட்டர் கருவிகளை தயாரிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இன்னும் 10 நாட்களில் சுமார் 1 லட்சம் வென்டிலேட்டர் கருவிகளை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -