கிருமிகளை அழிக்கும் பொருள்களுக்கு பொதுமக்கள் முண்டியடிப்பு.


எச்.எம்.எம்.பர்ஸான்-
கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்ற அச்சம் காரணமாக, வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொருட்டு, கிருமிகளை அழித்தொழிக்கும் பொருள்கள் அதிகம் விற்பனையாவதாக, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரோனா வைரஸ் பரிசோதனை முகாமாக ஜெயந்தியாயவில் பெற்றி கம்பஸ் அமைந்துள்ளமை, கோரோனா சிகிச்சை நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அமையப்பெற்றுள்ளமை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள், கொரோனா வைரஸ் பரவக்கூடும் எனும் அச்சத்தில் உள்ளனர்.இதனால், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் குறித்த தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற கிருமிகளை அழித்தொழிக்கும் பொருள்களை முண்டியடித்துக் கொண்டு கொள்வனவு செய்வதைக் காணமுடிகிறது.
அத்தோடு, கிருமிகளை அழிக்கக் கூடிய இயற்கை மருந்துப் பொருள்களான பெருங்காயம், மஞ்சள், கருஞ்சீரகம், கருஞ்சீரக எண்ணெய் உள்ளிட்ட இத்தியாதி ஆயுள்வேத மூலிகைகள் அதிகளவில் விற்பனையாவதாகவும் சில இடங்களில் இப்படிப்பட்ட மூலிகைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறதது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -