சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 3,222 பேர் உயிரிழந்துள்ளனர். 94,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதற்காக $12 Billion ( சுமார் இரண்டு லட்சத்தி 16 ஆயிரம் கோடி ரூபா ) ஒதுக்கியுள்ளது. இந்த பணம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு நிதியுதவியாக வழங்கப்படவுள்ளது.
இது குறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது:-
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏழை நாடுகள் மேலும் நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. எனவே அந்த நாடுகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.
இதன் மூலம் கொரோனா நோய் பரப்பும் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான மருந்துகள் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க இந் நிதி பயன்படுத்தப்படும். நிதியுதவி அதி விரைவாக வழங்கப்படும். இதன் மூலம் பல மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.
இதற்கு முன்பு எப்போலா, ஷிகா வைரஸ் நோய்களின் தாக்கத்தின் போதும் உலக வங்கி இது போன்று நிதியுதவி வழங்கியுள்ளது என்றார்.