இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் உடபளாத்த பிரதேச சபை உறுப்பினர் கனகரடனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (29.02.2020) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
"கண்டி மாவட்டத்தில் எமது முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் வெற்றி உறுதியாகியுள்ளது. 13 தொகுதிகளிலும் அவர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். உரிமை அரசியலுக்கும் தனி இடம் வழங்கினார். எனவே, இம்முறை அவரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளுடன் மக்கள் பாராளுமன்றம் அனுப்ப தயாராகிவிட்டனர்.
இது இ.தொ.காவின் உறுப்பினர் அண்ணன் மதியுகராஜாவுக்கும் தெரியும்.கண்டியில் இ.தொ.காவால் பாராளுமன்ற உறுப்புரிமையை பெறமுடியாது என்பதால் - சமூகத்தின் நலன்கருதியும் அவர் ஒதுங்கியுள்ளார் என அறியமுடிகின்றது.
அவரின் இந்த முடிவை நாம் வரவேற்கின்றோம். அடுத்த மாகாணசபைத் தேர்தலின்போது கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் அவருக்கு கண்டித் தமிழர்களின் ஆதரவை நாம் திரட்டிக்கொடுப்போம்.
அதேவேளை, மலையக சமூகத்தை விற்றுபிழைக்கும் தொண்டமான் குடும்பத்துக்கு பாடம் புகட்டுவதற்கு கண்டித் தமிழர்கள் தயாராகவே இருந்தனர். எனவேதான் மான்கள் எல்லாம் இங்குவர மறுக்கின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் வளர்ந்துவந்த இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவராக இருந்த ராஜமணி பிரசாந்துக்கு வேட்டு வைத்து அவரை ஓரங்கட்டிய தொண்டமான் குடும்பம், தற்போது அமரர். அருள்சாமியின் மகனுக்கும் ஆப்பு வைக்க பார்க்கின்றது.
அமரர். அருள்சாமிக்கென சமூகத்தில் சிறந்த பேர் இருக்கின்றது. அதனையும் இல்லாமல் ஆக்கி, பரத்துக்கும் வேட்டு வைப்பதற்காகவே பலிகடாவாக களமிறக்க பார்க்கின்றனர். நுவரெலியாவில் தனது மகனுக்கு அரசியல் களம் அமைத்துக்கொடுப்பதற்காகவே வளர்ந்துவருபவர்கள் வெட்டப்படுகின்றனர்.
இ.தொ.காவில் இருந்து கண்டிக்கு யார் வந்தாலும் நாம் மண்கவ்வ வைப்போம். துணிவிருந்தால் தொண்டமான் குடும்பத்தில் ஒருவர் இங்கு வந்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் காங்கிரசுக்காக அர்ப்பணித்தவர்களின் பிள்ளைகளை பலிகடாவாக்க முற்படக்கூடாது." - என்றுள்ளது.
