கல்முனை சுபத்திராராம விகாராதிபதி மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஷான் மலிந்த சந்திப்பு



பாறுக் ஷிஹான்-
ல்முனை பிரதேசத்திற்கு மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஷான் மலிந்தவினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தருமான றியாஸ் தலைமையில் அவரது அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பல்வேறு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
மேலும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமி மீள்குடியேற்ற திட்டமான இஸ்லாமபாத் மீள்குடியேற்ற திட்டத்திற்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன் போது கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு பிரதிநிதி கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும் கல்முனை மாநகர உறுப்பினருமான பஸீரா றியாஸ் , கல்முனை சுபத்திராராம விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர்,பள்ளிவாசல் நிர்வாகத்தினர் , இளைஞர்கள் , உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -