ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
காசல் ரி நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பிரதான ஆறுகளில் ஒன்றான டிக்கோயா தரவலை ஆற்றில் தரவலை பகுதியில் குப்பைகளை கொட்டுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
டிக்கோயா பகுதியில் சேரும் குப்பைகளை எவ்வித ஈவு ,இரக்கமும் இன்றி இந்த ஆற்றும் பகுதியில் கொட்டப்படுகின்றன.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் காரணமாக ஆற்று நீர் அசத்தமடைந்து இந்த ஆற்றினை பயன்படுத்தும் மக்கள் நோய்வாய்ப்படும் அகாயத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த ஆற்றுப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் நேரடியாக காசல்ரீ நீர்த்தேக்த்தினை சென்றடைவதனால் காசல் ரீ நீர்த்தேக்க நீரும் அசத்தமடையும் நிலை காணப்படுவதுடன்,நீர்த்தேக்கம் குப்பைகளில் நிறையும் நிலையும் காணப்படுகின்றன.
இதனால் தேசிய மின் உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளன.
அத்தோடு; இந்த நீரினை குழிப்பதற்காகவும் குடிப்பதற்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தும் பல நூறு குடும்பங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டிய நிலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதே நேரம் காசல் ரி நீர்த்தேக்கத்தில் வாழும் உயிரினங்களும் அழிவடையக்கூடிய அச்சுறுததலும் ஏற்பட்டுள்ளன.
எனவே இப்பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.