மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சித்தாண்டி உதயன்மூலை கிராமத்திலுள்ள மக்களுக்கு டெங்கு தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வீட்டினை சுகாதார முறைப்படி சுத்தம் செய்யும் வகையில் பொருட்கள் இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
நோர்வே மட்டு அம்பாறை தமிழர் ஒன்றியத்தினால் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட சித்தாண்டி உதயன்மூலை கிராமத்திலுள்ள 315 குடும்பத்தினருக்கு டெங்கு தாக்கத்தில் இருந்து பாதுகாக்க சுகாதாரத்தை பேணும் வகையில் மலசலக் கூடங்கள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை சுத்தம் செய்வதற்கு தேவையான சுத்திகரிக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது.
கல்குடா பியூச்சர் மைன்ட்டின் ஏற்பாட்டில் தலைவர் எம்.ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்வில் நோர்வே மட்டு அம்பாறை தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், ஹற்றன் நஷினல் வங்கி இன்சூரன்ஸ் பிரிவு உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சித்தாண்டி உதயன்மூலை கிராமத்திலுள்ள மக்களின் வீடுகளுக்கு சென்று சுத்தம் செய்வது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், சுத்திகரிக்கும் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
