அயதுல்லாஹ் அலி கொமெய்னி உயிரிழப்பு: உலக அரசியல் சமநிலைக்கும் பாரிய இழப்பு – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்



நூருல் ஹுதா உமர்-
யதுல்லாஹ் அலி கொமெய்னி அவர்களின் உயிரிழப்பு இஸ்லாமிய உலகிற்கு மட்டுமல்லாது, உலக அரசியல் சமநிலைக்கும் பாரிய இழப்பாகும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், ஈரான் மீது அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் உலகளாவிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்நிலையிலேயே ஈரானின் உயர்தலைவராக விளங்கிய கொமெய்னி அவர்களின் மறைவு உலக அரசியல் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர், தனது நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் உரிமைகளை வலியுறுத்திய தலைவராகத் திகழ்ந்ததாக எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் தளங்களில் செல்வாக்கு செலுத்திய அவரது வழிகாட்டுதல், உலக அரசியல் அமைப்பில் தனித்துவமான பாதையை உருவாக்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைக் காலங்களில் நடு கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றநிலை, உலக அமைதி மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும், வன்முறை மற்றும் இராணுவத் தாக்குதல்கள் எந்தவிதத்திலும் நிலையான தீர்வாக அமையாது என்பதே வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்த பாடமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த துயரமான தருணத்தில், மறைந்த அந்த தலைவரின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஹரீஸ், பிராந்திய மற்றும் உலக சக்திகள் எல்லாம் கட்டுப்பாடும் பொறுப்பும் காட்டி, அமைதி, உரையாடல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகளின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைவது அவசியம் எனக் கேட்டுக்கொண்டார்.

உலக அமைதி நிலைத்திருக்க வேண்டும் என அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :