அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளே இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு காரணம் எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு இந்த விடயம் தெரியும் என குறிப்பிட்ட அவர், இதற்குப் பின்னர் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என நினைக்கிறேன் என்றும் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முழுப் பொறுப்பு கூறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுஜன முன்னணியுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் இனியும் சுயாதீனமாக நடக்குமா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஐபிசி
