அட்டாளைச்சேனை அந்-நுார் மகா வித்தியாலயத்தில் ஆரம் சூடும் மகிழ்ச்சிப் பெருவிழா





ட்டாளைச்சேனை அந்-நுார் மகா வித்தியாலயத்தில் 'சிறகு விரித்த
சிட்டுக்களுக்கு ஆரம் சூடும் மகிழ்ச்சிப் பெருவிழா' நேற்று
மாலை (13.02.2020) பாடசாலையின் அதிபர் ஏ.முகம்மது அஸ்மி தலைமையில்
நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்
போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி
ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் கௌரவ அதிதியாகவும்,கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்
எம்.எஸ்.உதுமாலெப்பை நட்சத்திர அதிதியாகவும் அக்கரைப்பற்று கல்வி
வலயத்தின் பிரதிக் கல்விப்
பணிப்பாளர் ஏ.ஜீ.பஸ்மில்,உதவிக்கல்விப் பணிப்பாளர்களான
ஏ.எம்.நௌபர்டீன்,எஸ்.அம்ஜத்கான்,அட்டாளைச்சேனை பிரதேச சபை
உறுப்பினர்களான தமீம் ஆப்தீன்,திருமதி ஜெமீலா ஹமீட்,முன்னாள் பிரதேச சபை
உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள்,பாடசாலையின்
ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க
உறுப்பினர்கள்,நலன்விரும்பிகள்,பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை அந்-நுார் மகா வித்தியாலய மாணவர்களின் கல்வி அடைவு மட்டம் அதிகரித்துக் காணப்படுவதற்கு
இப்பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் சமூகம்
ஒன்றுபட்டுச் செயற்பட்டதன் காரணமாக வளர்ச்சியடைந்து செல்கின்றது.

முன்னர் ஒரு காலத்தில் இப்பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் தங்களது கற்றல்
கற்பித்தல் செயற்பாட்டில் குறைவாக செயற்பட்டதனால் பல ஆசிரியர்கள்
இப்பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதன் விளைவுதான் இன்று இளம்
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயற்படுகின்றனர்.இதன் பெறுபேறுதான் இன்று கிடைக்கப்பெறுகின்றது.

கல்வி முன்னேற்றமும் மாணவர்களின் ஒழுக்க வாழ்வும் சம அளவில் முன்னேற
வேண்டும் என்பதே கல்வித்துறை சார்ந்தவர்களதும் பொது மக்களினதும்
எதிர்பார்ப்பாகும். கல்வி முன்னேற்றத்தில் பாடசாலை மாணவர்களின்
ஒழுக்கத்திற்கு தவிர்க்க முடியாத பங்கு இருக்கின்றது. மாணவர்களின்
ஒழுக்கத்தில் முன்னேற்றத்தை நிரூபிக்காத பாடசாலை அதன் வேறு எந்த
முன்னேற்றத்தைப் பற்றியும் பெருமைப்பட முடியாது. அந்த அளவு கல்வி என்ற
கருத்தோடு மாணவர்களின் ஒழுக்கமும் சம்பந்தப்பட்டுள்ளது. நல்லொழுக்கம்
மனிதப் பண்புள்ள நல்ல நடத்தைகள் ஆளுமை வளர்ச்சி எல்லாவற்றையும் பாடசாலை ஊடாக பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். நவீன கல்வியும் அவ்வாறுதான் மாணவர்களின் ஒழுக்க வளர்ச்சிக்காகவும் பல திட்டங்களை வகுத்துள்ளது.

மாணவர்களின் ஒழுக்கம் என்பதை ஒரு தனிக் கருத்தாக ஆராயும் போதும் ஆளுமை
வளர்ச்சி பற்றி நோக்கும் போதும் அதில் பாடசாலையை மட்டும் குறை காண்பது
பொருத்தமானது அல்ல.பெற்றோர்களினதும் சமுதாயத்தினதும் பங்கு முக்கியமானதாகும். பாடசாலையை விட அதிகமான நேரத்தை ஒரு பிள்ளை
பெற்றோர்களோடும் குடும்பத்தவர்களோடும் செலவிடுகின்றது. பாடசாலைக்கு
வெளியே உள்ள நண்பர் குழாமும் சமுதாயமும் ஒரு பிள்ளையின் வளர்ச்சியில்
தாக்கம் செலுத்துவதை நாம் உணர்வோம்.

இன்று புதிய அரசாங்கத்தினால் பல மில்லியன் ரூபாக்களை முதலிட்டு ஒப்பந்த
வேலைகள் செய்தவர்களுக்கு பணம் வழங்க முடியாமல் இருப்பதை அவதானிக்க
கூடியதாகவுள்ளது.மிக விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது இதன்போது தங்களது பிரதேசத்தின் அதிகாரங்களைப் பெறுவதற்கு அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய தேவையுள்ளது என்றார்.

இதன்போது 2019ம் ஆண்டு பாடசாலை மட்டத்தில் பாடவிதானம்,
இணைப்பாடவிதானம்
ஆகியவற்றில் திறமைகாட்டிய மாணவர்கள், தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சையில் 2019ம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் 70
புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரியர் ஆர்.ஹாறுன்
இதன்போது அதிதிகளினால் பாராட்டி பரிசளிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை
கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

ஊடகப்பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -