திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் கேரளாள கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணொருவரும்,இளைஞயொருவரும் ஒன்றறை கிலோ கேரளா கஞ்சாவும்,45,000 ரூபாய் பணத்துடனும் இன்று (29) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக போதைப் பொருள் குற்ற விசாரணை பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு. எம். கீர்த்தி தெரிவித்தார்.
முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த ஜலால்தீன் றியாஸ் வயது(19) மற்றும் ஏ.எம்.சில்மியா (29) வயதுடைய பெண்ணொருவரையும் கேரளா கஞ்சாவுடன் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் தலைமையக போதைப் பொருள் குற்ற விசாரனை பொலிஸாருக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் இருவரும் மறைமுகமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும்,சந்தேக நபரான பெண் இளைஞனிடம் கஞ்சா விற்பனை செய்து பணம் கொடுப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் குற்ற விசாரணை பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
