நாட்டிலுள்ள அனைத்து அதிபர்,ஆசிரியர்களும் நாளைய தினம் 26.2.2020 புதன்கிழமை சுகயீன விடுமுறை

தலவாக்கலை பி.கேதீஸ்-

நாட்டிலுள்ள அனைத்து அதிபர்,ஆசிரியர்களும் நாளைய தினம் 26.2.2020 புதன்கிழமை சுகயீன விடுமுறையை அறிவித்து ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைக் நீக்க வலியுறுத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 நாளைய 26.2.2020 தினம் போராட்டத்தில் கலந்துக்கொள்ள விரும்புவோர் சுகயீன விடுமுறையை அறிவித்து காலை 9.30 மணியளவில் பத்தரமுல்ல விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக அணிதிரண்டு அங்கிருந்து நடைபவனியாக சென்று இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் நடைபெறும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளவும். 

இந்த ஆர்ப்பாட்டமானது ஆசிரியர்,அதிபர் சம்பள முரண்பாடுகளை தீர்த்தல், அரசியல் பழிவாங்கல்கள் போர்வையில் நியமனம் வழங்குதலை தடுத்தல், பாடசாலை பராமரிப்புக்காக பெற்றோரிடம் இருந்து பணத்தை திரட்டுவதை நிறுத்தி மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதத்தை ஒதுக்கச் செய்தல், ஆசிரியர்கள் கற்பித்தலுக்கு அப்பால் படிவங்கள் நிரப்புதலை தடை செய்தல் போன்ற முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கியதாகவும் இந்த போராட்டத்தில் 30 ற்கு மேற்ப்பட்ட ஆசிரியர் தொழிற்ச்சங்கங்கள் பங்கேற்க உள்ளன. 

அதிகாரிகளினாலோ அல்லது வேறுவகையிலோ அச்சுறுத்தலேனும் அதிபர்,ஆசிரியர்களுக்கு ஏற்படுமாயின் போராட்டத்தில் பங்கேற்கும் அனைத்து தொழிற்ச்சங்கங்களும் அதனை பொறுப்பேற்கும் என்ற உத்தரவாதமும் வழங்கப்படும்.

ஆசிரியர் அதிபர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தொழிற்ச்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து அனைத்து அதிபர் ஆசிரியர்களும் சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -