அரசாங்க வருமானம் 1,400 கோடி ரூபாவால் குறைந்துள்ளது: முன்னாள் நிதியமைச்சர்


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
2019ம் ஆண்டு January மாதத்துடன் ஒப்பிடும் போது 2020ம் ஆண்டு January மாதம் அரசாங்க வருமானம் 1,400 கோடி ரூபாவால் குறைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில்:-
நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் கடும் நெருக்கடியை நோக்கி செல்கின்றது. கடும் பொருளாதார வீழ்ச்சியும் ஆரம்பித்துள்ளது.

UNPயினர் தைரியமாக இருந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் UNPக்கு ஆணையை வழங்கினால், நாட்டிலுள்ள சகல துறைகளையும் வழமை நிலைமைக்கு கொண்டு வர முடியும்.

அதேவேளை MCC உடன்படிக்கையை பெரிய பூச்சாண்டியாக காட்டி, இதன் மூலம் நாடு அழியும், நாடு பிளவுபடும் என பௌத்த பிக்குகள் கூறினார்கள்.
அந்த MCC உடன்படிக்கையை காணாத பகுதி நேர வகுப்பு ஆசிரியர்களே கூறினார்கள். நாட்டு மக்களையும் ஏமாற்றினார்கள்.

தற்போது MCCயில் எந்த பிரச்சினையும் இல்லை சிறிய திருத்தங்களுடன் அதில் கையெழுத்திடவுள்ளதாக கூறுகின்றனர்கள். எழுத்துக்கள் சிலவற்றை மாற்றி MCC ஒப்பந்தத்தை திருத்தத்தை செய்வார்கள்.
காரணம் அதில் மாற்றம் செய்ய வேண்டிய எதுவுமில்லை. அந்த MCC உடன்படிக்கையில் கையெழுத்திடுவது நாட்டுக்கு நல்லது என்பதால், தான் அதனை எதிர்க்க போவதில்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -