கல்முனையில் களைகட்டிய பிரமாண்டமான தைப்பொங்கல் விழா! அரசஅதிபர் பங்கேற்பு: சமயத்தலைவர்கள் பங்கேற்பு!

காரைதீவு நிருபர் சகா-
ல்முனைப்பிராந்திய தமிழ் இளைஞர்; சேனை வருடாந்தம் நடாத்திவரும் தைப்பொங்கல் பெருவிழா நேற்று (15) புதன்கிழமை கல்முனை மாநகரில் கோலாகலமாக நடைபெற்றது.

கல்முனை பழைய பஸ்தரிப்பு நிலையமருகில் இளைஞர் சேனைத்தலைவர் பி.சங்கீத் தலைமையில் பொங்கலிட்டு வழிபட்ட இப்பெருவிழா நேற்று காலை 10மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக கல்முனை மாநகரில் மாட்டுவண்டில் ஊர்வலம் இடம்பெற்றது. அதில்கொணர்ந்த பொங்கல் பொருட்களைக்கொண்டு பொங்கலிடப்பட்டு பூஜையும் இடம்பெற்றது.

விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும் ஏனைய அதிதிகளாக மேலதிக அரச அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் எ.ஜே.அதிசயராஜ் உள்ளிட்டே பலர் கலந்துகொண்டனர்.

ஆன்மீக அதிதிகளாக கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ. க.கு சச்சிதானந்தசிவம் குருக்கள் கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்னதேரர் கல்முனை பங்குத்தந்தை ஆகியோர்கலந்துகொண்டனர்.

கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மற்றும் படைத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்;.
கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. அதிதிகளின் உரைகளும் இடையிடையே இடம்பெற்றன.
அதனையொட்டி கல்முனை மாநகரம் தோரணங்களாலும் நந்நதிக்கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -