அப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான சபாரி பிரவுசரில் கூகுள் நிறுவனம் பிழை கண்டறிந்துள்ளது.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ப்பிள் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு என்று கடந்த 2003ம் ஆண்டு சபாரி என்ற வெப் பிரவுசரை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பிரவுசரின் மொபைல் வெர்ஷன் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும் 2007 – 2012 காலகட்டங்களில் விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்தும் வகையில் சபாரி பிரவுசர் புழக்கத்தில் இருந்தது. உலகிலுள்ள பல கோடி பேர் சபாரி வெப் பிரவுசரை பயன்படுத்தி வருகிறார்கள்.


இந்நிலையில், அப்பிள் நிறுவனத்தோடு போட்டியிடும் நிறுவனமான கூகுள் நிறுவனமானது சபாரி பிரவுசரில் முக்கியமான சில பிழைகளை கண்டறிந்துள்ளது. அதாவது சபாரி பிரவுசரை பயன்படுத்தும் பயனர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு அந்த பிரவுசர் அனுமதிக்கிறது. பயனர்கள் இணையத்தில் உலவும் அனைத்து விவரங்களையும் கண்காணிக்க சபாரி பிரவுசர் அனுமதிப்பதாக கூகுள் நிறுவனம் பிழை கண்டறிந்துள்ளது. இதனால் பயனர்களின் சென்சிடிவ்வான தகவல்கள் அவர்களுக்கு தெரியாமலேயே கண்காணிக்கப்படுகிறது. இது சபாரி பிரவுசரை பயன்படுத்துபவருக்கு வருத்தமளிக்க கூடிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -