கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எனும் சிறிய அரசியல் அதிகாரத்தினூடாக கூடிய அபிவிருத்திப் பணிகளை செய்யக்கிடைத்தமை மனதிற்கு மகிழ்ச்சியழிப்பதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மத்தி, காத்தான்குடி மட்/மம/ஜாமியுல்லாபிரீன் வித்தியாலயத்திற்குரிய கட்டடத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 2 கோடி ரூபாய் பெறுமதியான கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு தற்பொழுது மாணவர்களுடைய பாவனைக்காக கையளிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் காத்தான்குடி மட்/மம/ஜாமியுல்ழாபிரீன் வித்தியாலயமானது, தற்பொழுது எமது ஊரில் வேகமாக வளர்ந்து வருகின்ற ஓர் பாடசாலையாகும். இதனால் அதற்குரிய பெளதீக வளங்களை ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தமாக கடந்த மாகாண சபை ஆட்சிக் காலத்தின் போது, அப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் என்னிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 2 மாடிக் கட்டடம் முழுமையாக TILES பதிக்கப்பட்டு மிகவும் நேர்த்தியான வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
இதன் விளைவாக, எதிர்காலத்தில் இப்பாடசாலை முகங்கொடுக்க இருக்கின்ற இடப்பற்றாக்குறையை இவ்வுதவி நிவர்த்தி செய்யும் என நாங்கள் நம்புகின்றோம் இதனூடாக மாணவர்கள் தமது கல்வியை சகல வசதிகளுடனும் தொடரக்கூடியதாக இருக்கும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மேலும் தெரிவித்தார்.