கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கான கலந்துரையாடல் (25) பிற்பகல் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரி கே .எஸ் சுஜித் பிரியந்த தலைமையில் கல்முனை பொலிஸ் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பி. ஜி. டி. ஏ. கருணாரத்ன கலந்துகொண்டார்.
இதன் போது கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்புக்குழுகளின் கட்டமைப்பு தொடர்பாக ஆராயப்பட்டதுன் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்பு நடவடிக்கைகள் பற்றி உறுப்பினர்கள் பொலிஸார் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன .
இதில் மதகுருமார்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஏ.எல் ஏ.வாஹிட், சிவில் குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள்,அங்கத்தவர்கள் , மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பொது மக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.