சஹ்ரானின் பெயரைப்பயன்படுத்தி காரைதீவு தவிசாளருக்கு கொலை அச்சுறுத்தல்!


சம்மாந்துறைப் பொலிசில் முறைப்பாடு!
காரைதீவு நிருபர் சகா-
ஹ்ரானின் பெயரைச்சொல்லி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று காரைதீவில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு தொலைபேசி வாயிலாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தவிசாளர் கி.ஜெயசிறில் இந்தியா செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இத்தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் சம்மாந்துறைப் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இனவாதரீதியில் கடும்சொற்களில் உரையாடியதோடு சஹ்ரானின் கட்டளைப்படி தன்னைக்கொலை செய்யவிருப்பதாகவும் குறித்த நபர் கூறியதாக முறையிடப்பட்டிருக்கிறது.
மாவடிப்பள்ளியிலிருந்து குறித்தநபர் தொலைபேசி எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. வெகுவிரைவில் பொலிசார் அவரைக்கைதுசெய்ய சகல விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இக்கொலை அச்சுறுத்தலுக்கு பின்னால் ஓர் உறுப்பினர் இருக்கலாமென தவிசாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -