ஞாயிற்றுக்கிழமை(26) மாலை சேனைக்குடியிருப்பு கணேச மகாவித்தியாலய மண்டபத்தில் மாலை 5மணியளவில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் வின்னர் விளையாட்டுகழக தலைவருமாகிய கே.செல்வராஜா தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் போது கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்களை பாராட்டி நினைவுசின்னம் வழங்கிவைக்கப்பட்டதோடு மாணவர்களின் மேலதிக கல்வி வளர்ச்சிக்காக பண பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் ,கௌரவ அதிதியாக கல்முனை மாநகரசபை பொறியியலாளர் ரி.சர்வானந்தா,சிறப்பு அதிதியாக மு.நல்லதம்பி குருக்கள்,சேனைக்குடியிருப்பு மகா வித்தியாலய அதிபர் வி.சசீந்திரன்,ஓய்வு பெற்ற அதிபர் மு.சந்திரலிங்கம்,ஓய்வுபெற்ற தபால் அதிபர் இ.குருநாதன் வின்னர் விளையட்டுகழகத்தினர், மாணவர்கள் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.