முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கம்பஹா மாவட்ட அமைப்பாளருமான ஷாபி ரஹீம்அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், அத்தனகல்ல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திஹாரி, கஹட்டோவிட்ட, உடுகொட, ஒகொடபொல போன்ற பிரதேசங்களில் வாழும் அந்தந்த பிரதேச ஒருங்கிணைப்பாளர்களின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 70 பயனாளிகளுக்கு அவர்களின் இல்ல வசதியை சீர் செய்வதற்காக சீமெந்துப் பொதிகள் அண்மையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு அத்தனகல்ல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் கௌரவ இர்ஷான் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்