ஹஸ்பர் ஏ ஹலீம்-
வெருகல் பிரதேச மீனவர்களுக்கான மீன் பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது வெருகல் பிரதேச சபை உறுப்பினர் எஸ். ஸ்ரீகாந் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் 182 மீனவர்களுக்கு மீன் பிடி உபகரணங்கள் வெருகல் பிரதேச செயலகத்தில் வைத்து இன்று (02) வழங்கப்பட்டன .
இன மத ஜாதி பேதங்களை கடந்து தனது சேவையில் இது ஒரு எடுத்துக்காட்டாகும் .குறித்த மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதில் வெருகல் பிரதேச செயலாளர் கே.குணநாதன்,மூதூர் பிரதேச சபை உறுப்பினர் றிபாஸ்,முன்னால் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் நிஸ்மி உள்ளிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்..