ஆர்.எம்.பி யில் இலஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள் ஆறு பேர் கைது


ஐ. ஏ. காதிர் கான்-

லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள் ஆறு பேரை, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான வேரஹெர அலுவலக வளாகத்தில் (RMV) கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சாரதி அனுமதிப் பத்திரத்தைக் குறுகிய காலப் பகுதிக்குள் பெற்றுத் தருவதாக உறுதியளித்து, பயனாளிகளிடம் ஒரு தொகைப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டிற்கமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இது போன்ற பிற தரகர்கள் தொடர்பான தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், கைதான சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -